
செய்திகள் மலேசியா
மடானி பள்ளிவாசல் நிலப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் ஞானத்தையும் மகிமையையும் எடுத்துக் காட்டுகிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
மடானி பள்ளிவாசல் நிலப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் ஞானத்தையும் மகிமையையும் எடுத்துக்காட்டுகிறது
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஜாலான் முன்ஷி அப்துல்லா மடானி பள்ளிவாசல் நிலம் தொடர்பான பிரச்சினையில் எட்டப்பட்ட தீர்மானம் வெற்றியையோ அல்லது ஆணவத்தையோ காட்டும் நோக்கம் கொண்டதல்ல.
அதே வேளையில் பள்ளிவாசல் கட்ட வேண்டிய தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இருந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் இப்பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வு எட்டப்பட்டது. இது இஸ்லாத்தின் ஞானம், வலிமை, மகிமையை நிரூபிக்கிறது.
உண்மையில், சில தரப்பினர் கூறுவது போல், உணர்வுபூர்வமான பிரச்சினைகள் உட்பட ஒரு நல்ல தீர்வைக் கண்டறிவது பலவீனத்தின் அறிகுறி அல்ல.
மடானி பள்ளிவாசல் இடத்தின் பிரச்சினையில் எட்டப்பட்ட தீர்வு எனக்கு ஒரு வெற்றி,
மேலும் நாம் இதை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm