நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி பள்ளிவாசல்  இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்: டத்தோஸ்ரீ முகமது ஃபாரோஸ்

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் முன்சி அப்துல்லாவின் லாட் 328 இல் ஜேக்கலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட மடானி பள்ளிவாசல் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும்.

12,142 சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், ஒரு நிகழ்வு மண்டபம், அலுவலகங்கள்,  பிற அடிப்படை வசதிகளும் இருக்கும் என  ஜேக்கல்  குழும நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஃபாரோஸ் முகமது ஜேக்கல் தெரிவித்தார்.

மலேசியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கருப்பொருளுடன் நான்கு மாடிகளுடன் இப்பள்ளிவாசல் கட்டப்படும்.

முதல் தளத்தில் அமைந்துள்ள பிரதான தொழுகை  அறையில் 592 பேர் உட்பட ஒரே நேரத்தில் சுமார் 2,900 பேர் தொழுகையில் ஈடுபடும் வகையில் இப்பள்ளிவாசல் கட்டப்படும்.

மடானி பள்ளிவாச; கட்டுமானத் தேதியிலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது கிள்ளாங் பள்ளத்தாக்கில், குறிப்பாக கோலாலம்பூரில் இஸ்லாமிய சின்னங்களின் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற மடானி பள்ளிவாசலுக்கான  அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கூறினார்.

இந்த விழாவில் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப், பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசலில் கட்டுமானம் அவரது தந்தை மறைந்த முகமது ஜேக்கல் அகமதுவின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும், உள்ளூர் சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் டத்தோஸ்ரீ முகமது ஃபரோஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset