
செய்திகள் மலேசியா
விமான இயந்திரத்தில் தீ: ஏர் ஆசியா விமானம் கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
சிப்பாங்:
கோலாலம்பூரிலிருந்து சென்ஷான் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் மீண்டும் கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது
அந்த A320-216 ரக போயிங் விமானத்தில் இயந்திர தீ ஏற்பட்டது கண்டறியப்பட்டதாகவும் இதன் காரணமாக கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்
நேற்றிரவு 10.37 மணிக்கு தங்கள் தரப்பு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் இதனால் 9 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்
PNUEMATIC DUCTING எனும் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான இயந்திரத்தில் கோளாறு தீ ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
விமானத்தில் இருந்த 171 பயணிகளும் விமான பணியாளர்களும் பத்திரமாக உள்ளனர் என்றும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்று முக்லிஸ் உறுதிப்படுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm