நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நிர்வாகம் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை பெறவில்லை: ஜலேஹா

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நிர்வாகம் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை பெறவில்லை.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா இதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கியதாக சமய போதகர் ஃபிர்டாவ்ஸ் வோங் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை
ஆதாரமற்றவை.

அரசாங்கம் விவரிக்கப்பட்டுள்ளபடி ஆலயத்திற்கு எந்த வகையான இழப்பீடும் வழங்குவதாக ஒருபோதும் உறுதியளிக்கவில்லை.

உண்மையில், நேற்று நான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த தீர்வைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பல நாட்கள் சர்ச்சையான விவாதங்களுக்குப் பிறகு, 130 ஆண்டுகள் பழமையான ஆலய நிர்வாகம்,

ஜேக்கல்  நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பள்ளிவாசலுக்கு  கட்டுவதற்கு வழிவகுக்க ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset