நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணி ஓய்வுபெறும் சிறந்த நாடுகளின் பட்டியலில் மலேசியாவிற்கு 7-ஆவது இடம்

கோலாலம்பூர்: 

பணி ஓய்வுபெறும் சிறந்த நாடுகளின் பட்டியலில் மலேசியா 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் தாய்லாந்து, கிரேக் ஆகிய நாடுகளை மலேசியா பின்னுக்குத் தள்ளி முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. 

உலகளாவிய பணி ஓய்வு குறியீட்டின்படி, மலேசியா இன்னும் ஓய்வுபெறுவதற்கான சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. 

மலேசியாவில்  வாழ்க்கை செலவீனம் குறைவாக இருப்பதாகவும் சுகாதாரத் பராமரிப்பு சிறப்பாக இருப்பதாகவும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் மாத வாடகை பொதுவாக RM1,500 முதல் RM2,500 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் உள்ளூர் உணவகங்களில் உணவின் விலை 10 ரிங்கிட்டிற்கு குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற சிறந்த இடங்களின் பட்டியலில் பனாமா முதலிடத்திலுள்ள நிலையில் போர்த்துகல் இரண்டாவது இடத்திலும், கோஸ்டாரிகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset