
செய்திகள் மலேசியா
பலஸ்தீன போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேலை கண்டித்து 21 அமைப்புக்கள் கண்டனம்
பினாங்கு:
பினாங்கில் உள்ள பல்வேறு இனங்கள், பின்னணியைச் சேர்ந்த மொத்தம் 21 அரசு சாரா அமைப்புக்கள் பாலஸ்தீன மக்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறும் இஸ்ரேலிய ஆட்சியைக் கண்டித்தது தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.
மலேசியாவின் சிட்டிசன்ஸ் இன்டர்நேஷனல் இயக்குனர் முஹைதீன் அப்துல் காதர் கூறுகையில், இந்த வாரம் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் உலக அல் குத்ஸ் தினம், நீண்டகாலமாக ஒடுக்குமுறையில் வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளைமீட்க சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் என்றார்.
"காசா தற்போது, 2024 அக்டோபர் முதல் நவீன வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றை அனுபவித்து வருகிறது, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வான்வழித் தாக்குதல்கள், பீரங்கி குண்டுவீச்சுகள், இஸ்ரேலின் இனப் படுகொலைகளில் கொல்லப்பட்டனர்.
"காசாவில் கையொப்பமிடப்பட்டதாகக் கூறப்படும் போர்நிறுத்தம் மீண்டும் இஸ்ரேலால் மீறப்பட்டது.
சியோனிச ஆட்சி ஒருபோதும் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பவில்லை, ஆனால் பாலஸ்தீனிய மக்களை ஒழிக்க மட்டுமே விரும்பியது என்பதை நிரூபித்தது என்றார் அவர்.
"எனவே, சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் இது மிக உயர்ந்த அளவிலான போர்க்குற்றம் மற்றும் இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று முஹைதீன் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த ஒற்றுமை கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களில் மலேசியாவின் இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் குழு , இஸ்லாத்தை பரப்புவதற்கான சர்வதேச அமைப்பு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், மலேசிய உயர்கல்வி அமைப்பு, பாண்டோக் சுகுன் சமூகம், அமான் பதானிக்கான மலேசியா ஃபவுண்டேசேஷன் மையம் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கேம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ரத்து செய்யவும், இஸ்ரேலுடனான அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நிறுத்தவும், காசாவிற்கு மனிதாபிமான உதவி, இராணுவ ஆதரவை அனுமதிக்க ரஃபா எல்லையைத் திறக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு எகிப்தை வலியுறுத்தியதாக முஹைதீன் கூறினார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்த நாடுகள் சொல்லாடல்களுக்கு அப்பால் இன்னும் முன்னோடியாக நகர்ந்து, இஸ்ரேல் செய்த நிறவெறி, கொடுங்கோன்மை, இனப்படுகொலையை எதிர்கொள்ள உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மாப்பின் அமைப்பின் தலைவர் முஹம்மத் அஸ்மி அப்துல் ஹமித் கூறுகையில் பினாங்கில் பாலஸ்தீனக் கொடி பிரச்சாரத்தை தனது அமைப்பு தொடங்கியுள்ளது என்றார்.
மேலும் ஒற்றுமையைக் காட்ட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் இராஜதந்திர, பொருளாதார, சமூக அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றார்.
"இந்த பிரச்சாரத்தில் மதம் மற்றும் இனம் பாராமல் அனைத்து மலேசியர்களையும் பங்கேற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் பாலஸ்தீனிய கொடி வெறும் துணி மட்டுமல்ல, மனிதநேயம் மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் சின்னம்" என்று அவர் கூறினார்.
மாப்பிம் அக்டோபர் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்திற்கு 23 மில்லியன் ரிங்கிட் நன்கொடையாக அனுப்பியுள்ளதாகவும், தற்போது போர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களின் செலவினங்களுக்காக இந்த ரமலானில் 2 மில்லியன் ரிங்கிட்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm