
செய்திகள் மலேசியா
30 சதவீத ஊழியர்கள் உடல் பருமனாக இருப்பதால் ஒரு நாளைக்கு மின் தூக்கி மூடப்படுகிறது: குவாந்தான் நகராண்மைக் கழகம் அறிவிப்பு
குவாந்தான்:
30 சதவீத ஊழியர்கள் உடல் பருமனாக இருப்பதால் ஒரு நாளைக்கு குவாந்தான் நகராண்மைக் கழக தலைமையத்தின் மின் தூக்கி மூடப்படும்.
குவாந்தான் நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ ரசிஹான் ஹட்ஜாருடின் இதனை கூறினார்.
எங்களின் ஊழியர்களில் 30 சதவீதத்தினர் அதிக எடை அல்லது உடல் பருமன் பிரச்சினைகளை எதிர்கொள்வதை தற்போதைய விகிதத்தைக் குறைக்க இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குவாந்தான் நகராண்மைக் கழகத்தில் 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இந்த மொத்த ஊழியர்களில் 30 சதவீதத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது நிச்சயமாக அதிகரித்து வரும் கவலைக்குரிய வாழ்க்கை முறையாகும்.
உடல் பருமன் பிரச்சினை உண்மையில் தீவிரமானது, அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இப்போதுதான் ஒரு குழு கிளினிக்கை நியமித்துள்ளோம்.
அங்கிருந்து, எங்கள் அனைத்து ஊழியர்களின் சுகாதார நிலையை சோதனை செய்ய முடிந்தது.
குவாந்தான் ரமலான் பசாரில் நடந்த சிறந்த அமைப்பாளர், வர்த்தகர் விருதுகளுக்கான விழாவிற்குப் பிறகு அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm