நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டத்தோ அர்மிசான்  மறுத்துள்ளார்

கோலாலம்பூர்:

சபா ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி மறுத்துள்ளார்.

ஊழல் நடவடிக்கைகளுடன் தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட ஆலோசனைக்காகக் காத்திருக்கும் அதே வேளையில்,  போலிசில் புகார் செய்யப்படும் என்றார்.

இந்த ரமலான் மாதத்தில் எனது பெயரை உள்ளடக்கிய ஒரு அவதூறு செய்தி வைரலாகி வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

விசித்திரக் கதைகள் வடிவில் அவதூறுகளைப் பரப்பியவர்களில் ஒருவர், பல்வேறு தரப்பினருக்குச் செய்தியை அனுப்பிய மக்களின் முன்னாள் பிரதிநிதியாக அடையாளம் காணப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset