நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்: பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்

பெங்களூரு:

மலேசியாவில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதில் இருந்து இறங்கி சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட நபரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது டிராலி பேக்கில் அரிய வகை குரங்கு குட்டிகள் கொண்டு வந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, எட்டு மணி நேரம் பயணப் பெட்டியில் அடைபட்டிருந்த குரங்குகள், மூச்சு விட சிரமப்பட்டன.

உடனடியாக அவற்றை வெளியே எடுத்து, அவற்றுக்கு தண்ணீர், உணவு கொடுக்கப்பட்டது.

குரங்குகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த விநாயகமூர்த்தி கோட்டீஸ்வரன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இருவர் மலேசியாவில் இருந்து இந்த குரங்குகளை கொண்டு வந்து கொடுத்தால், 10,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தாக கூறியதாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset