நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு திரெங்கானு மாநிலத்தில் மார்ச் 30-ஆம் தேதி சிறப்பு  விடுமுறை 

கோலா திரெங்கானு: 

நோன்பு பெருநாளை முன்னிட்டு திரெங்கானு மாநிலத்தில் மார்ச் 30-ஆம் தேதி சிறப்பு  விடுமுறை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. 

மக்கள் நோன்பு பெருநாளுக்குத் தயாராக ஏதுவாக இந்தச் சிறப்பு விடுமுறை வழங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாநில மந்திரி பெசார் Datuk Seri Ahmad Samsuri Mokhtar தெரிவித்துள்ளார். 

அன்பானவர்களுடன் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்காக மார்ச் 30- ஆம் தேதி கூடுதல் விடுமுறை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset