நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்சாலைக்கு விடுமுறை கொடுத்து விட்டு ஊழியர்களுக்கு நோன்பு பெருநாள் பொருட்களை வாங்கிக் சமூக ஊடகப் பிரபலம், கைருல் அமிங்

கோலாலம்பூர்:

இளம் தொழிலதிபரும் சமூக ஊடகப் பிரபலமுமான கைருல் அமிங் (Khairul Aming) தமது ஊழியர்களுக்காகச் செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கிளந்தான் மாநிலத்தில் உணவு உற்பத்தித்தொழில்  செய்துவரும் அவர் தமது தொழிற்சாலையை மூடிவிட்டு அதில் வேலை செய்யும் ஊழியர்களை அழைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான நோன்பு பெருநாள் பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

Instagram-இல் அவர் பதிவேற்றிய அந்தக் காணொலியை இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்தனர். 

ஊழியர்களைத் துணி கடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான புத்தாடைகளை வாங்கிக் கொடுத்தார், 

பேரங்காடிக்கு அழைத்துச் சென்று நோன்பு பெருநாளுக்கான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார், 

பொருட்களை வாங்கிக் கொடுத்தப் பின் அவர்களுக்கான நோன்பு பெருநாள் அன்பளிப்பு பணத்தை வழங்கினார். 

தமது வர்த்தகத்துக்காக அயராமல் உழைக்கும் ஊழியர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதே தனது நோக்கம் என்று 32 வயதாகும் கைருல் தமது Instagram பதிவில் குறிப்பிட்டார். 

பலரும் கைருலின் குணத்தைப் பாரட்டினர்.

கைருல் கடந்த 2021-ஆம் ஆண்டு "சம்பால்" வகை உணவுப் பொருளை அறிமுகப்படுத்தினார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அவர் அறிமுகப்படுத்திய 2-ஆவது "சம்பால்" உணவு மூன்றே நிமிடங்களில் 1.2 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனையானது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset