நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள பட்டாசுகளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது

பட்டர்வொர்த்:

அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்  கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அரச மலேசிய சுங்கத் துறையின் இயக்குநர் ரொஹைசைத் அலி இதனை கூறினார்.

கடந்த மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் பெராயில் உள்ள தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சோதனைகள் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில்  கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக  அனுமதியின்றி கடத்தும் ஒரு கும்பலையும் சுங்கத் துறை கண்டுபிடித்தது.

அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு நடத்திய சோதனையில், 1,332 அட்டைப்பெட்டிகள் அல்லது 28,780 கிலோ பட்டாசுகள், பல்வேறு பிராண்டுகளின் பட்டாசுகள் அனுமதியின்றி ஏழு கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset