
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது
திருச்சி:
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm