நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MAHB செயல்திறன் மீது இணைய தாக்குதல்: விமான சேவைகளில் தடங்கல் ஏற்படவில்லை 

கோலாலம்பூர்: 

MAHB செயல்திறன் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. இதனால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் விமான சேவைகள், செயல்பாடுகளில் எந்தவொரு தடங்களும் இல்லை என்று தேசிய இணைய பாதுகாப்பு அமைப்பு, மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனம் கூட்டாக அறிவித்தது 

கடந்த மார்ச் 23ஆம் தேதி மலேசிய ஏர்போட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இணைய தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது 

இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக, MAHB நிறுவனம் மீது ஹேக்கர்கள் முடக்கம் செய்தனர் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset