நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் கேபிளைத் திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி ஆடவர் பலி

ஈப்போ:

ஈப்போ-லுமுட் நெடுஞ்சாலையில் பெட்ரோனாஸ் அருகே தாமான் சிலிபின் ரியாவில் டிஎன்பி கேபிளைத் திருட முயன்றபோது ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார் என்று நம்பப்படுகிறது.

ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமத் இதனை கூறினார்.

நேற்று  மாலை 6.07 மணிக்கு 38 வயது நபரும் மற்றொரு சந்தேக நபரும் மின் கேபிளை துண்டித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவ இடத்தில் ஒரு சாட்சி ஒரு வீடியோவைப் பதிவு செய்தார். அதில் அவர்கள் இருவரும் திருடும் நோக்கத்துடன் டிஎன்பி கேபிளை துண்டிப்பதைக் காட்டியது.

அப்போது திடீரென ஒரு வெடிப்பு ஏற்பட்டு இருவரும் உடனடியாக மயக்கமடைந்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் தானாக எழுந்து ஹோண்டா சி100 மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset