
செய்திகள் மலேசியா
ஊடகவியலாளர்களின் நலன் காக்க கிக் தொழிலாளர் சட்டத்திருத்தம்: மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்
கோலாலம்பூர்:
ஊடக நிறுவனங்களுக்கு கீழ் பணிபுரியும் பகுதிநேர ஊடகவியலாளர்களை அரவணைக்கும் விதமாக ஊடக நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பினை செவ்வனே ஆற்ற வேண்டும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இந்த அறிவுறுத்தலை முன்வைத்தார்
பெர்கேசோ திட்டத்தின் கீழ் சுயதொழில் சமூக பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் சுயமாக தொழில் புரியும் தொழிலாளர்களின் நலன் காக்க இது உதவுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்
இந்த SKSPS திட்டம் சுயமாக தொழி செய்யும் தரப்புக்குக் கொண்டு வரப்பட்டது. அதில் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர், காணொலி வடிவமைப்பாளர் ஆகியோர் அடங்குவர்.
செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஊடகவியலாளர்களின் சேவையைப் போற்றும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டு மக்களுக்கு செய்திகளை வழங்கும் கடப்பாட்டினை அவர்கள் முறையே கொண்டிருப்பதாக HRDCorp நிறுவனத்தின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சரும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவன் சிம் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm