நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத்திற்கு அதிக நிபுணத்துவ தொழிலாளர்கள் தேவை: சரவாக் மாநில துணை பிரிமியர் தகவல் 

கூச்சிங்

சரவாக் மாநிலத்திற்கு அதிக நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகிறது. மாநில மேம்பாட்டு துறைகளுக்கான சேவையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது என்று சரவாக் மாநிலத்தின் துணை பிரிமியர் டக்லஸ் உங்கா எம்பாஸ் கூறினார் 

மாநிலத்தில் உள்ள குத்தகையாளர்கள் தம்மிடம் இந்த குறைகளைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார் 

குடிநுழைவு துறைக்கான கடுமையான விதிமுறைகள் இருக்கும் சூழலில் குத்தகையாளர்களும் போதிய அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார் 

சரவாக் மாநில மேம்பாட்டிற்கு அதன் பிரிமியர் அபாங் ஜொஹாரி துன் ஒப்பேங் சீரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். 

மேலும், சரவாக் மாநிலத்தில் புதிய விமான நிலையம், ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் திட்டங்கள் என இரு பெரிய திட்டங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset