நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆதரவற்ற மலாய்க்காரக் சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுக்கும் இந்தியச் சமூக ஊடகப் பிரபலத்தின் செயல் பாராட்டதற்குரியது

கோலாலம்பூர்:

ஆதரவற்ற குழந்தைகளும் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியச் சமூக ஊடகப் பிரபலம் Devadass David அவர்களுக்குப் புத்தாடைகளை வாங்கிக் கொடுக்கும் காணொலி சமூக ஊடகங்களில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அவர் நெகிரி செம்பிலான் செனாவாங்கிலுள்ள ஒரு துணிக்கடைக்கு மலாய்க்காரச் சிறுவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கான புத்தாடைகளை வாங்குக் கொடுப்பது அக்காணொலியில் காண முடிந்தது. 

சிறுவர்களும் தங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் உடைகளைத் தேர்வு செய்தனர். 

அதனைப் பார்க்கும் போது, தன் குழந்தைப் பருவத்தை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார். 

அவர்களின் மகிழ்ச்சியைக் காணும் போதும் தனக்கு ஆனந்த கண்ணீர் வருவதாகவும் அவர் காணொலியின் குறிப்பிட்டார்.

மேலும், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, உறவினர்களின் எந்த உதவியும் இல்லாமல் தனது தாயாரால் வளர்க்கப்பட்டதையும் அவர்  நினைவு கூர்ந்தார்.

இனத்திற்கு அப்பாற்பட்ட ஒற்றுமையும் அன்பின் உருவமும் தான் மலேசியா என்று பொதுமக்கள் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset