நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவசரமாக அடிக்கல் நாட்ட வேண்டிய அவசியம் என்ன? புனிதன் கேள்வி

கோலாலம்பூர், 

மாநகர மன்றம் (DBKL), ஜேக்கல் (Jakel), மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மஸ்ஜித் மடானி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்குமென பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது, இந்திய சமுதாயத்திற்கு அதிர்ச்சியாக செய்தி என மலேசிய இந்திய முன்னேற்ற கட்சியின் தலைவர் புனிதன் சாடியுள்ளார்.

பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, கோயில் நிர்வாகத்தை கட்டாயமாக இடம்பெயரச் செய்ய பிரதமர் முயற்சிக்கிறாரா? என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

பிரதமர் அமைதி காக்க வேண்டும்

இந்த பிரச்சினையை சமரசமாக தீர்க்கும் முயற்சிக்கு பதிலாக, பிரதமர் அமைதியாக இருந்து, அனைத்து தரப்புகளும் ஒரு நல்ல முடிவை எட்ட அனுமதிக்க வேண்டும். ஏன் இவ்வளவு அவசரம்? தேசிய ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கம் என்பவற்றை கருத்தில் கொண்டு, காத்திருக்க முடியாதா? என புனிதன் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இடமாற்றத்தையும், அடிக்கல் நாட்டும் விழாவையும் பேச்சுவார்த்தை முடியும் வரை நிறுத்துங்கள்.

வருடப்பிறப்பின் போது இச்சம்பவம் வருத்தம் அளிக்கின்றது

இந்துகள் கொண்டாடும் சித்தைரைப் புத்தாண்டு (14/4/2025) வரவிருக்கிறது. மத உணர்வுகள் சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

2007-இல் பாடாங் ஜாவாவில் தீபாவளிக்கு முன்னதாக ஆலயத்தை  இடித்த சம்பவம் இன்னும் எங்களது மனதில் இருக்கிறது. இப்போது வருடப்பிறப்பிற்கு முன்பே இப்படி ஒரு சம்பவம் நிகழ்வது வருத்தமளிக்கிறது.

இந்தியர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, தாய்நாட்டின் ஒற்றுமை, சமாதானத்தைக் காப்பாற்ற பிரதமர் பொறுமையாக செயல்பட வேண்டும்எ என புனிதன் வலியுறுத்தினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset