நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக வணிகம் திட்டம் அறிமுகம்; எஸ்எம்இ வங்கியின் வாயிலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக புதியதாக வணிகம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்எம்இ வங்கியின் வாயிலாக இத்திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை அறிவித்தார்.

இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்காக மடானி அரசாங்கத்தின் கீழ் அமைச்சு பல திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக், அமானா இக்தியாரின்  பெண் திட்டம், பேங்க் ரக்யாட்டின் கீழ் பிரிவ்-ஐ, எஸ்எம்இ கோர்ப் வாயிலாக ஐ-பேப் உட்பட பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாண்டு மட்டும் தெக்குன் கீழ் 100 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாட் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட், மித்ராவின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

 தற்போது எஸ்எம்இ வங்கியின் வாயிலாக புதியதாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிகள் அனைத்தும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் நடைபெற்ற வணிகம் திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

வணிகம் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவிக்கு சிறு தொழில் வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தது 1 லட்சம் ரிங்கிட்டில் இருந்து 3 லட்சம் ரிங்கிட் வரை கடனுதவிக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிலுக்கு தேவையான இந்திரங்கள் வாங்குவது, வர்த்தக வாகனங்கள் வாங்குவது உட்பட  வர்த்தக விரிவாக்க திட்டங்களுக்கு இந்த கடனுதவியை பயன்படுத்தலாம்.

குறிப்பாக மிகவும் குறைந்த வட்டியில் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

ஆகவே இக்கடனுதவியை பெற்று இந்திய வணிகர்கள் தங்களின் வணிகத்தை மேலும் வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என டத்தோஸ்ரீ ரமணன் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset