
செய்திகள் மலேசியா
தவறான நிர்வாக முறையை தவிர்க்கும் பயிற்சிகள் அவசியம் : டத்தோ அன்புமணி பாலன்
கிள்ளான்,
இந்திய தொழில்முனைவோர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், மலேசிய அரசு பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களை எளிதில் அணுகும் வகையில் ஜெய சக்தி கூட்டுறவுக் கழகம் கிள்ளானில் தொழில் முனைவோர்கள் கருத்தரங்கை நடத்தியது.
கிரிஸ்ட்டல் கிரான் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 120க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தெக்கூன், அமனா இக்தியார், எஸ்எம்இ, சக்கிம் உள்ளிட்ட அரசின் முக்கிய உதவித் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டதுடன், தொழில் வளர்ச்சிக்கான நடைமுறைகள், நிர்வாகக் கூறுகள் மற்றும் தொழில்துறை உத்திகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வர்த்தகர்களுக்கு தகுந்த பயிற்சிகள் அவசியம்
தொழில் முனைவோர் - கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் தனிச்செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
“தகுந்த பயிற்சி இல்லாததால், இந்திய தொழில்முனைவோர்கள் தவறான நிர்வாகத்தால் பெரிய இழப்புகளை சந்திக்கின்றனர். இதை மாற்ற, தெக்கூன் வழியாக விரைவில் ஒரு பெரிய திட்டத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்,” என தெரிவித்தார்.
“அரசாங்கம் வழங்கும் கடன் உதவிகளைப் பெறும் தொழில்முனைவோர்கள், இம்மாதிரியான கருத்தரங்குகளில் கலந்துகொள்வதன் மூலம் வணிக வளர்ச்சிக்கு சரியான திசை கண்டுபிடிக்க முடியும்” குறிப்பாக, “நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்த அரசு முழுவிளைச்சியுடன் உதவத் தயாராக உள்ளது” என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 48 இந்திய சிறு தொழில்முனைவோர்களுக்கு மொத்தமாக 2.96 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டதையும், இது இந்திய தொழில்முனைவோர்களுக்கான அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
75ஆண்டுகாலமாக செயல்படும் கழகம்
“இக்கழகம் கடந்த 75 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இத்தகைய கருத்தரங்குகளை மலேசியாவின் பிற மாநிலங்களிலும் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என ஜெய சக்தி கூட்டுறவுக் கழக தலைவர் டத்தோ பாஸ்கரன் தெரிவித்தார்.
“இந்திய தொழில்முனைவோர்கள் அரசாங்க உதவிகளை முறையாக அறிந்து பயன்பெற, இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்குகள் அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவை அறிந்து கொள்ள வேண்டும்
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவின் பிரதிநிதியாக கலந்து கொன்ட கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினரும் காப்பர் வட்டார இந்து சங்க தலைவர் அருள்நேசன் “தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு முக்கியமானது; தொழில்முனைவோர்கள் இதை ஏற்றுக் கொண்டு தொழிலில் முன்னேற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கிள்ளான் மற்றும் கோலாலம்பூரில் இருந்து வந்த தொழில்முனைவோர்கள் இலவசமாக இந்த கருத்தரங்கில் பங்கேற்று, தங்களது வணிகத்தை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளைப் பெற்றனர்.
“தவறான நிர்வாகம் நம் வளர்ச்சியை தடுத்துவிடக்கூடாது; அறிவும் திட்டமிட்ட செயல்களும் வெற்றியை உறுதிப்படுத்தும்” என்பது இந்த கருத்தரங்கின் மையக்கருத்தாகத் திகழ்ந்தது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm