நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு காரை அலங்கரித்த இ-ஹெய்லிங் சீன ஓட்டுநர்

கோலாலம்பூர்:

நோன்பு பெருநாள் முன்னிட்டு தன்னுடைய காரை வாழ்த்து அட்டைகள், பிளாஸ்டிக் கெதுபாட் மற்றும் வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்கரித்த  இ-ஹெய்லிங் சீன ஓட்டுநரின் செயல் இணையவாசிகளின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

அக்காரில் பயணித்த பயணி ஒருவர் காரில் உள்ளே அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணொலி எடுத்து அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளார். 

ஓட்டுநர் சீனராக இருந்தாலும் நோன்பு பெருநாளை முன்னிட்டு காரை அலங்கரித்தது மட்டுமல்லாமல் நோன்பு பெருநாள் பாடல்களையும் அவர் காரில் ஒளிப்பரப்பு செய்துள்ளார். 

மலேசியாவில் இனம், மதம் அனைத்தும் கடந்து மலேசியர்கள் அனைத்துப் பெருநாளையும் கொண்டாவது நெகிழ்ச்சியாக இருப்பதாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வாய்ப்பு கிடைத்தால் ஓட்டுநருக்கு 10 நட்சத்திரங்களை வழங்கி மதிப்பிடுங்கள் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset