நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூராவில் நன்கொடை பெட்டியிலுள்ள பணத்தைத் திருடிய ஆடவரைக் காவல்துறை தேடி வருகிறது

சிரம்பான்:

சூராவில் நன்கொடை பெட்டியிலுள்ள பணத்தைத் திருடிய ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக சிரம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சிரம்பான் Kampung Mambau-விலுள்ள  சூராவில் பணத்தைத் திருட ஒரு கருவியைப் பயன்படுத்தி அங்கு நுழைந்த காட்சி சிசிடி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தலைகவசம், ஜேக்கேட் அணிந்திருந்த அடையாளம் தெரியாத ஆடவர் சூராவின் பின்புறத்திலிருந்து நுழைவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

சந்தேக நபர் சூராவின் பூட்டைத் உடைத்ததாக நம்பப்படுகிறது.

பின் சூராலுள்ள நன்கொடை பெட்டியிலுள்ள பணத்தை எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொண்டான்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக  Mohamad Hatta Che Din கூறினார்.

இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள் சிரம்பான் காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset