நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஸ்ஜித் மடானி அடிக்கல் நாட்டுவிழா திட்டமிட்டபடி நடைபெறும் – அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர் – 

ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உருவாக்கப்படவுள்ள மஸ்ஜித் மடானி கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் வியாழக்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

“மார்ச் 27ஆம் தேதி திட்டமிட்டப்படி நான் அடிக்கல் நாட்டுவேன்,” என அவர் இன்று புலௌபோல் போலீஸ் தலைமையகத்தில் நடந்த  218ஆவது போலீஸ் தின விழாவில் உரையாற்றும் போது இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில், மாநிலத் தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர், தேசிய காவல் துறைத் தலைவர் தான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்பாக, Lawyers for Liberty (LFL) எனும் அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜைத் மாலிக், “இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் அவசரமாக இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தவறான முடிவாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும், “இம்மசூதி அமைப்பதற்காக கோயிலை மாற்றுவது மாறுபட்ட மதங்களை கொண்ட நாடு என்ற மலேசியக் கொள்கையுடன் ஒத்துப்போகுமா?” என அவர் கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இதற்கிடையே, அன்வார் இப்ராஹிம் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன், “மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து, அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும்” என கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset