நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத் துறைக்கு மாற்றுத் தொழிலாளர்களுக்கான அனுமதியை அரசாங்கம் விரைந்து கொடுக்க வேண்டும்: பிரெஸ்மா - பிரிமாஸ் கோரிக்கை

கோலாலம்பூர்:

உணவகத் துறைக்கு மாற்றுத் தொழிலாளர்களுக்கான அனுமதியை அரசாங்கம்  விரைந்து கொடுக்க வேண்டும்.

பிரெஸ்மா, பிரிமாஸ் கூட்டாக இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள், இந்திய  முஸ்லிம் உணவகங்கள் போதுமான அந்நிய தொழிலாளர்கள்  இல்லாததால் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன.

குறிப்பாக மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும் படி அரசாங்கத்திற்கு கோரிக்கை முன் வைத்துள்ளோம்.

அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்தித்து மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கையை முன்வைத்தோம்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆகவே காலம் தாழ்த்தாமல் விரைந்து எங்களுக்கு மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி  ஆகியோர் இன்று கூட்டாக தெரிவித்தனர்.

இந்திய, இந்திய முஸ்லிம் உணவகங்களில் வேலை செய்வதற்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லை.

உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதிலாக மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அப்போதுதான் எங்களால் தொடர்ந்து வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும்.

மாற்றுத் தொழிலாளர்களும் கிடைக்கவில்லை என்றால்  உணவகங்கள் கடுமையான நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும்.

குறிப்பாக 150க்கும் மேற்பட்ட உணவகங்கள மூடப்படும்.

ஆகவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எங்களுக்கு விரைந்து உதவுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பிரிமாஸ் ஏற்பாட்டிலான நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின் ஊடகவியலாளர்களிடம் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset