நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகவியலாளர்களின் பணி அளப்பரியது: HRDCorp நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் புகழாரம்

கோலாலம்பூர்: 

மனிதவள அமைச்சின் கீழ் உள்ள எச்.ஆர்.டி கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் MAJLIS BUKA PUASA நிகழ்ச்சி இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கலந்து சிறப்பித்தார். 

அதில் பேசிய அமைச்சர் சிம் இங்கு கூடியுள்ள செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் தங்கள் நலன் பாராமல் மக்களுக்கு செய்திகளை வழங்குவதில் உழைத்து வருகின்றார்கள். ஓரிடத்தில் ஒரு செய்தியை சேகரித்துவிட்டு அடுத்த செய்திக்காக அவர்கள் ஓடுகிறார்கள். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் உழைக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களது பாதுகாப்பை மனிதவள அமைச்சு உறுதிப்படுத்தும் என்று சிம் கூறினார் 

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எச்.ஆர்.டி கோர்ப் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் ஹமித் தாவூத், மனிதவள அமைச்சின் அதிகாரிகள், எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவன ஊழியர்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் 

செய்தியாளர்கள் சந்திப்பில் மனித வள அமைச்சு உள் நாட்டு தொழிலாளர்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஆற்றிவரும் பயிற்சிகளை விவரித்தார்.

அனைவருக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset