நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துருக்கியேவில் பதற்றம்: 5 நாள்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டம்

இஸ்தான்புல்:

துருக்கியேவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஐந்தாம் நாளாகத் தெருக்களில் கூடியிருக்கின்றனர்.

இஸ்தான்புல் மேயர் இக்ரம் இமாமோலோவை (Ekrem Imamoglu) நீதிமன்றம் கைதுசெய்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பத்தாண்டு காணாத ஆர்ப்பாட்டங்களைத் துருக்கியே இப்போது சந்திக்கிறது.

இமாமோலோவின் ஆதரவாளர்கள் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர் ஆகிய நகரங்களில் போராட்டம் நடத்துகின்றனர்.

கடந்த வாரம் கலகத் தடுப்புக் காவல்துறையினர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதினர். எழுநூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டங்களை அதிபர் ரிசப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdoğan) கடுமையாகக் குறைகூறினார். அவற்றைச் சாலைப் பயங்கரவாதம் என்று அவர் சாடினார்.

துருக்கியேவில் 2028ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் நடந்தாக வேண்டும்.

இமாமோலோ, அதிபர் எர்துவானின் முக்கிய அரசியல் எதிரியாகப் பார்க்கப்படுகிறார்.

அவர் கைதுசெய்யப்பட்டது, அரசியல் சூழ்ச்சி என்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் எதிர்த்தரப்பினர் குரல் கொடுக்கின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset