நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துனிசியா நாட்டு அதிபர் அந்நாட்டின்  பிரதமர் கமெல் மடூரியைப் பிரதமர் பதவியிலிருந்து  நீக்கியுள்ளார் 

துனிஸ்: 

துனிசியா நாட்டு அதிபர் கைஸ் சையத், அந்நாட்டின் பிரதமர் கமெல் மடூரியைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் 

துனிசியா நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதிபர் கைஸ் சையத் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் 

நடப்பு அரசாங்கத்தின் செயல்பாடுகளினால் பெரும் அதிருப்தி அடைந்த அதிபர் சையத், பிரதமரைத் தற்போது நீக்கியுள்ளார் 

துனிசியா தற்போது மிகவும் மோசமான பொருளாதார சவாலை எதிர்நோக்கி வருகிறது. இதனால் அந்நாட்டில் வேலையின்மை சூழலும் அதிகரித்துள்ளது 

கடந்தாண்டு கமெல் மடூரி பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் தற்போது அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் 

துனிசியாவில் 12 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதிபர் கைஸ் சையத்தின் இந்த நடவடிக்கை உள்ளூர் அரசியலில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset