நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: 8-ஆவது ஆண்டாகப் பின்லாந்துக்கு முதலிடம், 64-ஆவது இடத்தில் மலேசியா

லண்டன்: 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடைத் தற்காத்துள்ளது. 

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் அதில் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகியவை 2 முதல் 5-ஆவது இடங்களில் உள்ளன. 

இப்பட்டியலில் மலேசியா 64-ஆவது இடத்தில் உள்ளது.

மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை. 

அமெரிக்கா பட்டியலில் 24-ஆவது இடத்திலும் பிரான்ஸ் 33-ஆவது இடத்திலும் உள்ளன. 

இங்கிலாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என  அறிக்கை குறிப்பிடுகிறது.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset