
செய்திகள் உலகம்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கை போலிஸ் படைத் தலைவர் தேசபந்து நீதிமன்றத்தில் ஆஜர்
கொழும்பு:
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது.
அதன்படி, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இத்தகைய பின்னணியில், அவர் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am