நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று மூடப்படுகிறது: விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு 

லண்டன்: 

உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

உள்ளூர் நேரப்படி இரவு 11.23 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்டமாக 10 வாகனங்களில் வருகை தந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

விபத்தின் காரணமாக புகைமூட்டம் அதிகளவில் காணப்படுவதாலும் மின் விநியோகம் தடை பட்டதாலும் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை முழுவதும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 

பயணிகள் யாரும் விமான நிலையப் பகுதிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset