
செய்திகள் வணிகம்
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
கோலாலம்பூர்:
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
மைஇவெண்ட்ஸ், அப்சலூட் இவெண்ட்ஸ் ஆகியவை இணைந்து பெருநாளை முன்னிட்டு இந்த மாபெரும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்துள்ளன.
உள்ளூர் தொழில்முனைவோரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் வாய்ப்பை காயா ராயா பெருநாள் சந்தை ஏற்படுத்தி தந்துள்ளது.
மலேசியாவின் மிகப் பெரிய பெருநாள் விற்பனை சந்தை என மலேசிய சாதனை புத்தகத்தில் காயா ராயா பெருநாள் சந்தை இடம் பெற்றுள்ளது.
இது காயா ராயா பெருநாள் சந்தைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
இதன் அடிப்படையில் நான்காவது ஆண்டாக இந்த சந்தை இன்று மார்ச் 21ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி மார்ச் 24ஆம் தேதி அதிகாலை 6 மணியோடு ஒரு நிறைவுக்கு வரும். இந்த சந்தை ஜாலான் டுத்தாவில் அமைந்துள்ள மைடெக் வளாகத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 66 மணி நேரம் இடைவிடாது மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம்.
இதுவரை கிட்டத்தட்ட 700 விற்பனை கூடங்களை அமைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் 25 மில்லியன் ரிங்கிட் லாபத்தை இலக்காக கொண்டு காயா ராயா பெருநாள் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக 2 மில்லியன் பேர் இந்த மாபெரும் சந்தைக்கு வருவார்கள் எனவும் இலக்கிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் பொழுதுபோக்கிற்கு மட்டும் கவனம் செலுத்துவதில்லை.
மாறாக உள்ளூர் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm