நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: விமான சேவைகள் ரத்து 

ஜகார்த்தா: 

இந்தோனேசியாவில் கடுமையான எரிமலை சீற்றம் காரணமாக ஏழு அனைத்துலக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன 

தரையிலிருந்து கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தூரம் வரை கரும்புகை சூழ்ந்துள்ளதால் விமான நிலைய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் 

சுற்றுலா தீவான புளோரஸில் உள்ள 1,703 மீட்டர் இரட்டை சிகர எரிமலையான மவுண்ட் லெவோடோபி லாகி-லாகி, வியாழக்கிழமை பிற்பகுதியில் 11 நிமிடங்கள் ஒன்பது வினாடிகளுக்கு வெடித்தது, எரிமலை எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்துலக விமான சேவைகளைத் தவிர்த்து உள்ளூர் விமான சேவைகள், அனைத்துலக விமான சேவைகள் குறிப்பாக, தாய்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய விமான சேவைகளும் தாமதம் அடைந்தன 

இதுவரை எந்தவொரு உயிரிழப்பு, பொருட்சேதங்களும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset