
செய்திகள் மலேசியா
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தகைய செயல்கள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு முரணானவை என்று பிரதமர் குறிப்பிட்டதாக, அவரின் மூத்த பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா தெரிவித்தார்.
‘ஒரு நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் பரஸ்பர மரியாதை கொள்கையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தால், இன, மத மற்றும் தேசிய உணர்வுகளைப் பாதிக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்று மதிப்பிற்குரிய பிரதமர் நம்புகிறார்,” என அவர் கூறினார்.
மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அன்வார் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட, பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பில், துங்கு நஸ்ருல் அதனைத் தெரிவித்தார்.
தமக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பும் ஒரு சில தரப்பினரின் செயல்கள் மிகக் குறைந்த ஒழுக்கத்தைக் கொண்டவை மற்றும் அவை இஸ்லாம் மத்தத்தால் தடைசெய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறியதாக அவர் விளக்கினார்.
அவதூறுகளைப் பரப்பி பொதுமக்களைக் கவர முயற்சிக்கும் சில தரப்பினரின் விரக்தியை அது காட்டுவதாக அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am