நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன்: 

விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானி என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

இதற்கு முன், அமெரிக்க விஞ்ஞானியான பெக்கி விட்சன் 675 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார்.

அவருக்கு அடுத்து ரஷிய விண்வெளி வீரர்களான ப்யோடர் யுர்சிகின் (672 நாட்கள்), யூரி மாலென்சென்கோ (641 நாட்கள்) ஆகியோர் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் (609 நாட்கள்) உள்ளார்.

இதனால், விண்வெளியில் அதிக நாட்களை கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரிசையில் சுனிதா வில்லியம்ஸ் 2ஆவது இடம் பிடித்து உள்ளார்.

சுனிதா வில்லியம்சுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்றாக பணிபுரிந்த பேர்ரி புட்ச் வில்மோர் (462 நாட்கள்) விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 6-ஆவது அமெரிக்க விண்வெளி வீரராக உள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset