நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்

வாஷிங்டன்:

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர்.

17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது.

தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு அவர்களை மீட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ள நிகழ்ச்சியை நாசா நேரலையாக ஒளிபரப்புகின்றது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்கா அரசு முயற்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset