நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோவின் ரியல்மாட்ரிட் சாதனையை  முறியடிக்கும் எம்பாப்வே

மாட்ரிட்:

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிளையான் எம்பாப்பே ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். 

பாரிஸ் சையின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து கடந்த ஆண்டு ரியல்மாட்ரிட் அணிக்கு மாற்றமாகி சென்றார்.

2024-25 அவருடைய அறிமுக சீசன். முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சறுக்கினாலும் அதன் பின் அபாரமாக விளையாடி வருகிறார். 

அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அறிமுக சீசனில் இதுவரை ரியல்மாட்ரிட் அணிக்காக 31 கோல்கள் அடித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர். 

இவர் ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடிய அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார். 

இந்த சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு இன்னும் 3 கோல்கள் தேவை. இதனால் ரொனால்டோ சாதனையை முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset