நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

நாட்டில் சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்க எச்ஆர்டி கோர்ப் வாயிலாக பென் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதை ஒரு வணிகச் செலவாகக் கருதக்கூடாது.

மாறாக புதுமை, உற்பத்தித் திறன், பொருளாதார வளர்ச்சியை இயக்கும் முதலீடாகக் கருத வேண்டும்.

வணிகங்கள் லாபத்திற்காக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. மாறாக மனித வளங்களால் இயக்கப்படுகின்றன.

எனவே சிறந்த முதலாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரிமியர் எம்ப்ளாயர்ஸ் நெட்வொர்க் (PEN) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு முதலாளியாக, உங்கள் பங்கு வேலை உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் மலேசியாவின் எதிர்கால பணியாளர்களை உருவாக்கும் சிற்பிகள்.

திறமையை வளர்ப்பதற்கான உங்கள் திறன் மலேசியாவின் பொருளாதார மீள்தன்மை, உலகளாவிய போட்டித்தன்மையை தீர்மானிக்கும்.
 
இன்று தலைநகரில் நடந்த பென் திட்டத்தின் அறிமுக விழாவில் தனது உரையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவரது உரையை மனிதவள அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப் வாசித்தார்.

எச்ஆர்டி கோர்ப்  தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset