நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்து தமிழக முதல்வருடன் பேசப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்து தமிழக முதல்வருடன் பேசப்பட்டது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இன்று மரியாதை நிமித்தம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசு முன்னெடுத்திருக்கின்ற காலை உணவுத் திட்டம் குறித்தும், 

விரைவில் மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்தும் பேசப்பட்டது. 

தமிழக அரசின் சார்பில் தன்னாலான உதவிகளை வழங்குவதாகத் தமிழக முதல்வர் உறுதியளித்தார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset