
செய்திகள் விளையாட்டு
அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் கிளப்களின் பட்டியல்
கொழும்பு:
சர்வதேச ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் (கிளப்) சபைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முதலிடத்தில் உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிக வருமானத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருடாந்த வருமானம் இந்திய மதிப்பில் 18,760 கோடி என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
வருடமொன்றிற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 79 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை 59 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வருமானமாக ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் கிளப் நான்காம் இடத்திலும், பங்களாதேஷ் கிரிக்கெட் கிளப் ஐந்தாவது இடத்திலும் உள்ளதுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் 8 ஆவது இடத்தில் உள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, நியுசிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am