நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையை செய்யும் டான்ஸ்ரீ நடராஜா பாராட்டுக்குரியவராக விளங்குகிறார்: ஜெகத்ரட்சகன்

பத்துமலை:

பத்துமலையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையை செய்யும் டான்ஸ்ரீ நடராஜா பாராட்டுக்குரியவராக விளங்குகிறார்.

இந்தியாவின் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இதனை கூறினார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா என் சகோதரர் ஆவார்.

அவரை சந்திப்பதற்காக மலேசியா வந்திருந்தேன். அதேவேளையில் பத்துமலையில் நடைபெற்ற மாசி மகத் திருவிழாவிலும் கலந்து கொண்டேன்.

நான் பத்துமலைக்கு வருவது புதியது அல்ல. ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது டான்ஸ்ரீ நடராஜா ஒரு புதியதை செய்து பாராட்டுக்குரியவராக விளங்குகிறார்.

குறிப்பாக ஒரு தேவலோகத்திற்கு செல்வது போல் இந்த பத்துமலை எனக்குத் தெரிகிறது.

அதேவேளையில் தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அவர் கட்டிக் காத்து வருகிறார்.

அவரின் இந்த சேவைகளும் சாதனைகளும் தொடர வேண்டும்.

பத்துமலையில் மேலும் பல அபிவிருத்திகளை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset