நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து துணைக் காவல் அதிகாரிகளை வேலைக்குச் சேர்க்கிறது சிங்கப்பூர்: உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் அரசு 5 நாடுகளிலிருந்து துணைக் காவல் அதிகாரிகளை வேலையில் சேர்க்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தியா, சீனா, இலங்கை, மியன்மார், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் வருகின்றனர்.

இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ இன்று நாடாளுமன்றத்தில் அது பற்றி விவரம் தந்தார்.

அந்த நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தீவு முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் காவல்துறைக்கு உதவுவர்.

விமான நிலைய முனையங்கள், வங்கிகள், முக்கிய தேசிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் துணைக் காவல் அதிகாரிகள் பணியாற்றுவதைப் பார்க்கலாம்.

துணைக் காவல் அதிகாரிகளில் பெரும்பாலோர் சிங்கப்பூரர்கள் என்றும் அந்த நிலை தொடரும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே 2017ஆம் ஆண்டுமுதல் மலேசியா, தைவான் போன்ற இடங்களிலிருந்து துணைக் காவல் அதிகாரிகள் வேலைக்குச் சேர்க்கப்படுகின்றனர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை இம் மாதம் அதன் அவசரகால மருத்துவச் சேவைகளுக்கும் வெளிநாட்டினரை வேலைக்குச் சேர்க்கவிருக்கிறது. 

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset