நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

செர்பிய நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீச்சு: 3 எம்பிக்கள் காயம்

பெல்கிரேட்: 

செர்பியாவின் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் அங்கு புகை குண்டு வீசப்பட்டது. இதில் 3 எம்பிக்கள் காயமடைந்தனர். செர்பியாவில் கடந்த பல மாதங்களாக அரசியல் நெருக்கடி நிலவி வருகின்றது. 

மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். வடக்கில் நவம்பரில் ஒரு கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இதனால் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். 

இந்த சூழலில் செர்பிய நாடாளுமன்றத்தில் நேற்று பல்கலைக்கழகங்கள் கல்விக்கான நிதியை அதிகரிப்பது தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருந்தது. இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset