நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வரி விதிப்பு பஞ்சாயத்து: அமெரிக்காவுக்கு வழங்கப்படும்  மின்சார விநியோகம்  தடை செய்யப்படும்

ஒட்டாவா: 

கடும் வரிவிதிப்பு காரணமாக வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது 

அமெரிக்காவுக்கு வழங்கப்படும் மின்சார விநியோகம், கனிமவளங்களைத் தடை செய்யப்படும் என்று கனடாவின் ஒன்டாரியோ பிரதமர் DOUG FORD எச்சரிக்கை விடுத்துள்ளார் 

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் தான் அமெரிக்காவுக்கு மின்சார விநியோகங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக நியூயார்க், மிஷிகன், மின்னெசொட்டா ஆகிய மாகாணங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது 

அதுமட்டுமல்லாமல் ,நிக்கெல் விநியோகத்தை நிறுத்த FORD எச்சரிக்கை விடுத்துள்ளார் 

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மெக்சிகோ, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காடு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்

அதில் கூடுதலாக 10 விழுக்காடு கனடா நாட்டிலிருந்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset