நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார் அளித்தது 

பெய்ஜிங்: 

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டிற்கு எதிராக சீனா உலக வர்த்தக அமைப்பிடம் புகார் ஒன்றை அளித்துள்ளது 

சீனப் பொருட்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கூடுதல் வரியானது லெவி கட்டணங்களுடன் இணைத்து 20 விழுக்காடு வரை உயர்வு கண்டிருப்பதால் பெய்ஜிங் இந்த புகாரைச் செய்துள்ளது 

உலக வர்த்தக அமைப்பின் அடிப்படை பன்முக வர்த்தக வரி விதிமுறையை மீறியுள்ளதாகவும் சீனாவின் பொருளாதாரத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பீட்டுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியது 

இந்நிலையில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து வரும் வேளாண்மை இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது 

சீனா அமெரிக்காவுக்கு எதிராக WTO அமைப்பிடம் புகார் ஒன்றை அளித்துள்ளதை WTO அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் .

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset