நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் ஆணை 

வாஷிங்டன்: 

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆணையிட்டுள்ளார் 

உக்ரைன் அதிபர் விளேடிமீர் செலென்ஸ்கியுடன் வாஷிங்டனில் ஏற்பட்ட காரசார விவாதத்தை அடுத்து டிரம்ப் இந்த உத்தரவை வெளியிட்டார் 

அமெரிக்கா அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது. எங்களின் ராணுவ உதவிகளை உக்ரைன் நாட்டிற்கு வழங்குவதை மறுமதிப்பீடு செய்யவே இந்த நிறுத்தம் கொண்டு வந்ததாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது 

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அமெரிக்காவின் உதவிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்கா உக்ரைனுக்கு இதற்கு முன் உதவிகளை வழங்கி வந்துள்ளையும் அவர் மறந்து விடக்கூடாது என்று அவர் சொன்னார் 

கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் உக்ரைனும் கையெழுத்திட்டால் உக்ரைனிடம் வழங்கிய பில்லியன் கணக்கான நிதிகளைத் திரும்ப பெற முடியும் என்று அமெரிக்கா எண்ணுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset