நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பீன்ஸில் கடும் வெப்பம் காரணமாக  பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன

மணிலா:

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கடும் வெப்பம் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வெப்பத்தின் அளவு ஆபத்தான நிலையை எட்டியிருப்பதாக பிலிப்பீன்ஸ் தேசிய வானிலை ஆலோசனை அமைப்பின் அறிக்கை கூறியது.

எனவே நீண்ட நேரம் வெளியில் நடுமாடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பிலிப்பீன்ஸின் பெரும்பாலான பகுதிகளைக் கடும் வெப்பம் தாக்கியது.

இதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.

மில்லியன் கணக்கான பிள்ளைகளின் அன்றாடக் கல்வி பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மணிலாவில் வெப்பநிலை ஆக அதிகமாக 38.8 டிகிரி செல்ஸியஸ் பதிவானது.

இன்று வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் முன்னெச்சரிக்கையாகப் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset