நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கைக் காவல்துறை தலைவர் தலைமறைவு 

கொழும்பு:

இலங்கைக் காவல்துறை தன்னுடைய தலைவரை வலைவீசித் தேடி வருகிறது.

கவனமின்றிச் சோதனையை நடத்தியதால் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதாணை பிறப்பித்ததிலிருந்து 53 வயது தேஷாபண்டு தென்னாகூன் (Deshabandu Tennakoon) தலைமறைவாய் உள்ளார்.

அவருடைய கைதாணை கடந்த வெள்ளிக்கிழமை (28 பிப்ரவரி) பிறப்பிக்கப்பட்டது.

"அவரைக் கைதுசெய்ய அவருடைய வீட்டிற்குச் சென்றோம். ஆனால் அவரைக் காணவில்லை. அவருடைய பாதுகாவலர்கள் மட்டும் இருந்தனர்" என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தென்னாகூன் வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெலிகாமா (Weligama) நகரில் உள்ள ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் சோதனை செய்யுமாறு தென்னாகூன் கொழும்பில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெலிகாமாவின் உள்ளூர்க் காவல்துறைக்கு அந்த மறைமுகமான சோதனை பற்றித் தெரியாது.

அவர்கள் கொழும்பிலிருந்து வந்திருந்த அதிகாரிகளைச் சந்தித்தபோது தூப்பாக்கிச்சூடு நடந்தந்து. அதில் ஓர் அதிகாரி கொல்லப்பட்டார்.

இன்னோர் அதிகாரிக்குக் கடும் காயம் விளைவிக்கப்பட்டது.

அந்த ஹோட்டலில் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset