நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமைதியை விரும்பும் உக்ரைன் அதிபர் தான் அமெரிக்காவுக்குத் தேவை: மைக் வால்ட்ஸ் 

வாஷிங்டன்: 

ரஷ்யாவுடன் அமைதியை விரும்பும் உக்ரைன் நாட்டு அதிபர் தான் அமெரிக்காவுக்குத் தேவை என்று அமெரிக்கா நாட்டின் மூத்த ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறினார் 

ஆனால், நடப்பு உக்ரைன் அதிபராக இருக்கும் விளேடிமீர் செலென்ஸ்கியிடம் அந்த எண்ணம் இருக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார். 

ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற காரசார விவாதம் உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது 

அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரவே அதிபர் டிரம்பும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார் 

உக்ரைன் நாட்டு மக்களுக்காக அதிபர் விளேடிமீர் செலென்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று வால்ட்ஸ் கேட்டுக்கொண்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset