நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் தனியார் நிறுவன விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை

கேப்கேனவரல்:

அமெரிக்கா,டெக்சாஸைச் சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி ஒரு விண்கலத்தை அனுப்பியது.

'புளூ கோஸ்ட்' என்ற இந்த விண்கலம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்திலிருந்து லேண்டர் தனியாகப் பிரிந்து நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.

நிலவின் வடகிழக்கு விளிம்பிலுள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது.

நிலவில் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதை பயர்பிளை நிறுவனம் உறுதி செய்தது.

நிலவில் விண்கலங்களை தரையிறக்குவதில் பல்வேறு நாடுகளின் அரசு விண்வெளி நிறுவனங்களே திணறும் நிலையில், தோல்வி அடையும் நிலையில் தனியார் நிறுவனம் நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கி வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset